Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
மட்டக்களப்பு சிறுவர் இல்லம் ஒன்றில் 21 சிறுவர்களுக்கு கொரோனா
Home செய்திகள் மட்டக்களப்பு சிறுவர் இல்லம் ஒன்றில் 21 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு சிறுவர் இல்லம் ஒன்றில் 21 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று

IMG 0780 மட்டக்களப்பு சிறுவர் இல்லம் ஒன்றில் 21 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 21சிறுவர்கள் உட்பட 22பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த இல்லம் மூடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் உள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார  வைத்திய சாலைக்கு சென்ற போது அங்கு சில மாணவர்களுக்கு கொரோனா  தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஏனைய சிறுவர்களுக்கும் அங்கு கடமையாற்று பவர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு 19பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து  குறித்த சிறுவர் இல்லம் மூடப் பட்டுள்ளது என்றும் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version