Home உலகச் செய்திகள் ஆப்கனில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களை மீட்க அமெரிக்கா முயற்சி

ஆப்கனில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களை மீட்க அமெரிக்கா முயற்சி

1016095453 ஆப்கனில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களை மீட்க அமெரிக்கா முயற்சி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக இருந்த மொழி பெயர்ப்பாளர்கள் ஆபத்தில் இருப்பதால் அவர்களை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

இம்மாத இறுதி வாரத்தில் இதற்கான “Operation Allies Refuge” என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப் படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பல்வேறு முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி யுள்ளனர். பல இடங்களில் முன்னேறி வருகின்றனர்.

மொழி பெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி செய்தி யாளர்களிடம் விளக்கினார்.

“அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்பு மிக்க பணியை அங்கீகரிக்கப் படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்பு கிறோம்” என்றார் அவர்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிகாரி ஒருவர், “முதற் கட்டமாக விசா விண்ணப் பங்கள் அனுமதிக்கப்படும் வரை, மீட்கப்படும் சுமார் 2,500 பேர் அமெரிக்காவிலோ அல்லது வேறு நாட்டிலோ உள்ள அமெரிக்காவின் படைத் தளத்தில் தங்க வைக்கப் படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version