Tamil News
Home செய்திகள் இலங்கையின் கடன் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்-உலக வங்கி

இலங்கையின் கடன் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்-உலக வங்கி

இலங்கையின் கடன் நிவாரண நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாக உலக வங்கியின் பிரதி தலைவர் மார்ட்டின் ரைசர் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்கால சவால்களில் இலங்கையின் பின்னடைவை இது வலுப்படுத்தும் எனவும் உலக வங்கியின் பிரதி தலைவர் கூறியுள்ளார்.

சீனா கடன் மறுசீரமைப்புக்கு எழுத்து மூலமாக இணங்கியுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

Exit mobile version