Tamil News
Home செய்திகள் கடன் வாங்குவதானால் சீனாவின் நிதிச் சான்றிதழ் கட்டாயம் –IMF

கடன் வாங்குவதானால் சீனாவின் நிதிச் சான்றிதழ் கட்டாயம் –IMF

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற இலங்கைக்கு சிறந்த வழி சீனா உட்பட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தர வாதங்களைப் பெறுவதாகும் என நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நிதி உத்தரவாதம் இல்லாவிட்டாலும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் தொகையை வழங்க பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளை மறுத்த அவர், சீனாவின் உத்தரவாதத்தை இலங்கை பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன் தொகையை வழங்கத் தேவையான நிதிச் சான்றிதழ்களை கடனாளிகளிடம் இருந்து இலங்கை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version