Home செய்திகள் இந்தியா செல்லும் தனது மக்களுக்கு கனடா பயண எச்சரிக்கை

இந்தியா செல்லும் தனது மக்களுக்கு கனடா பயண எச்சரிக்கை

314 Views

கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிமீ சுற்றளவைத் தவிர்க்கவும். குறிப்பாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று கனடா  தனது மக்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த பயண எச்சரிக்கையானது கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி கனடா நாட்டின் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த கவனமுடன் சென்றுவர வேண்டும் ஏனெனில் அங்கு தற்போதைக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு செல்வதைத் தவிர்க்கவும். மிகுந்த அவசியமின்றி அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மையில்  இனரீதியிலான வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பதால், கனடாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version