Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பு மாவட்டம் தமிழரசுக் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது – கஜேந்திரகுமார்

மட்டக்களப்பு மாவட்டம் தமிழரசுக் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது – கஜேந்திரகுமார்

தமிழர் தாயகத்தின் ஒரு மையப்பிரதேசம்தான் மட்டக்களப்பு மாவட்டமாகும். இந்த மாவட்டம்தான் தென் தமிழ் தேசத்தின் இதயம். இந்த மண்ணை ஏனைய பிரதேசத்திலிருந்து பிரிப்பற்கு பாரிய குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மண் தமிழரசுக் கட்சியின் ஒரு கோட்டையாக இருந்து வந்தது. இந்த மண்ணில் அரசியல் செய்வதென்பது ஒரு சாதாரண விடையமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேசத்தின் வாழைக்காலை எனும் இடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

எமக்கு எந்த சவால்கள் வந்தலும் அவைகளைத் தாண்டி எமது அரசியல் பயணம் சென்றுகொண்டே இருக்கம். நாங்கள் உயிரோடு இருக்கம் வரைக்கும் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந் 10 வருடங்களாக மக்கள் வாக்களித்து வந்தலும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய முகங்களைத்தான் மக்கள் தெரிவு செய்கின்றார்கள். தங்களுக்கு முன்னுரிமை வழங்காத எவருக்கும் மக்கள் வாக்களிக்காத தன்மை இருக்கின்றது. இனியும் நாம் ஏமாந்து போகக்கூடாது என்பதற்காக மக்கள் இந்த தேர்தலில் விழிப்படைந்துள்ளார்கள். இதுதான் இந்த தேர்தல் முக்கியவிடையமாக உள்ளது.

இந்த தேர்தலில் மக்கள் சரியாக வாக்களிக்காவிட்டால் இன்னும் மீண்டெழமுடியாமல் போகலாம் எனவே இந்த தேர்தலை வித்தியாசமாக மக்கள் பார்க்க வேண்டும். இது இவ்வாறு இருக்க ஒரு நாட்டின் பிரதான சட்டம்தான் அரசியல் அமைப்பாகும் அந்த அரசியலமைப்பை நாட்டினுடைய இரண்டாவது முக்கிய இனமான இருக்கின்ற தமிழர்கள் நிராகரிப்பதாக இருந்தால் அந்த நாட்டிலே தமிழர்களுக்கு இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதுதான் அர்த்தமாகும்.

எனவே தமிழ் தேசியக மக்கள் முன்னணியைத் தவிர வேறு எந்தவொரு தரப்பிற்கும்,எமது மக்கள் வாக்கழித்தால் அமையப்போகின்ற புதிய அரசினால் கொண்டு வரப்படுகின்ற நான்காவது அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை தமிழ் மக்கள் விரும்பி ஆதரித்து, எமது உரிமைகளை நாங்களாவே விரும்பி கைவிடுகின்ற நிலமை உருவாகும்.

ஏனெனல் அது மாத்திரமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புää தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,கருணா அம்மான்,ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி, உள்ளிட்ட அனைவரும்,அந்த அரசியலமைப்பை ஆதரிக்கப் போகின்றது.

இதுதான் உண்மை நிலமை. எனவே எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில போட்டியிடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர வேறு எவருக்கும் வாக்களளித்தால் நாங்களாகவே விரும்பி எமது உரிமைகளைக் கைவிடுவதற்குச் சமனாகும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

Exit mobile version