Home உலகச் செய்திகள் ‘அவுஸ்திரேலிய அரசின் கொள்கை மனிதாபிமானமற்றது, பகுத்தறிவற்றது’- அகதிகள் விவகாரத்தில் முன்வைக்கப்படும் விமர்சனம்

‘அவுஸ்திரேலிய அரசின் கொள்கை மனிதாபிமானமற்றது, பகுத்தறிவற்றது’- அகதிகள் விவகாரத்தில் முன்வைக்கப்படும் விமர்சனம்

அவுஸ்திரேலிய அரசின் கொள்கை

அவுஸ்திரேலிய அகதி கவுன்சில் கணக்குப்படி, தற்காலிக பாதுகாப்பு விசாவின் கீழ் 4 ஆயிரம் ஆப்கான் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர்.

‘அவுஸ்திரேலிய அரசின் கொள்கை மனிதாபிமானமற்றது எனக் கூறும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக்கத்தின் முன்னாள் பேராசிரியர் ஜான் மின்ஸ், “உங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய கவலைப்பட வேண்டிய நிலையான பாதுகாப்பின்மை… பாதுகாப்பு மற்றும் நிரந்தரம் இல்லாத தற்காலிக விசாக்கள்… இது பகுத்தறிவற்றது,” என்று பேராசிரியர் மின்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த நான்காண்டுகளில் ஆப்கானிய அகதிகளுக்கு 15 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும் என அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அறிவித்திருந்தார். இந்த ஒதுக்கீடு கூடுதலான ஒதுக்கீடு அல்ல, அரசியல் தந்திரமிக்க ஒதுக்கீடு என விமர்சித்திருக்கிறார் பேராசிரியர் மின்னஸ்.

Exit mobile version