Home செய்திகள் ஈழத்தமிழர் உயிர் காக்க தீ மூட்டிய முதல் நெருப்பு அப்துல்ரவூப்

ஈழத்தமிழர் உயிர் காக்க தீ மூட்டிய முதல் நெருப்பு அப்துல்ரவூப்

ஈழத்தமிழர் உயிர் காக்க தீ மூட்டிய

ஈழத்தமிழர் உயிர் காக்க தீ மூட்டிய முதல் நெருப்பு….,  யாழ் குடாநாட்டின் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதால் துயருற்ற அப்துல்ரவூப்  தமிழர்களின் விடியலுக்காக தமிழகத்தில் தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்டார்.

ஈகைத்தமிழன் அப்துல்ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு  வேந்தல்  இன்று (அவரின் இறுதிவார்த்தை “என்னைக் காப்பாற்றாதீர்கள், ஈழத்தமிழரைக் காப்பாற்றுங்கள்”) என்பதாகும்.“

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பில் பல இலட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வை சந்தித்தனர். இதில் துயருற்று, ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, 1995 டிசம்பர் 15 பெரம்பலூரில் பெரியார் சிலை அருகில் காலை 7 மணிக்கு “ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள். ஈழத்தில் மக்கள் செத்துமடியும் போது தாய் தமிழகத்தில் சிங்கள விளையாட்டு வீரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா…?” தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் சிங்கள வீரர்களை அனுமதிக்காதே ! என முழக்கமிட்டு, தன் உடல் முழுவதும் மண்னென்னை நனைக்கப்பட்ட  போர்வையை சுற்றிக்கொண்டு கைகளில் துண்டு பிரசுரங்களை ஏந்திக்கொண்டு தனக்கு தானே தீவைத்துக்கொண்டு முழக்கமிட்டபடி ஈகைச் சாவையடைந்தார் அப்துல் ரவூப்

தமிழகத்தில் முதன் முதலாக தமிழீழ மக்களுக்காக  தன்னை தீ மூட்டி மாய்த்துக்கொண்ட ஈகைப் போராளி  அப்துல்ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version