Tamil News
Home உலகச் செய்திகள் வெளிநாடுகளுக்கான பயணத்தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்த அவுஸ்திரேலியா

வெளிநாடுகளுக்கான பயணத்தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்த அவுஸ்திரேலியா

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட வெளிநாடுகளுக்கான பயணத்தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவுதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஆகக்குறைந்தது எதிர்வரும் ஜுன் 17 வரை அவுஸ்திரேலியர்களுக்கான வெளிநாட்டு பயணத்தடை நடைமுறையில் இருக்கும்.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 17ம் திகதி அவுஸ்திரேலிய அரசு இத்தடையை கொண்டுவந்திருந்ததுடன் இத்தடை எதிர்வரும் மார்ச் 17ம் திகதியுடன் காலாவதியாகவிருந்தது.

எனினும் கொரோனா பரவலின் தீவிரம் வெளிநாடுகளில் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இப்பயணத்தடையை மேலும் நீட்டிக்கவேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.

Exit mobile version