Tamil News
Home உலகச் செய்திகள் இஸ்ரேலில் அரசமைக்க முடியாததால், கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேலில் அரசமைக்க முடியாததால், கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாஹுவினால் கூட்டணி அரசு அமைக்க முடியாது போனதையடுத்து, இஸ்ரேலிய நாடாளுமன்றை கலைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து அங்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

புதிய தேர்தல் செப்டெம்பர் 17இல் நடைபெறும். 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், நெதன் யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இதனால் கூட்டணி அமைத்து அரசமைக்கும் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனாலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.

Exit mobile version