Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா எதிரொலி,ஜப்பானில் அதிகரிக்கும் தற்கொலைகள்

கொரோனா எதிரொலி,ஜப்பானில் அதிகரிக்கும் தற்கொலைகள்

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஜப்பானில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை  தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து  ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள தகவலில் “2009ஆம் ஆண்டுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டில்தான் தற்கொலை சதவீதம் அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதில் 13,943 ஆண்கள் 6,976 பெண்கள் ஆவர்.

இது 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 3.7 சதவீதம் அதிகம். 2009ஆம் ஆண்டில் ஜப்பானில் தற்கொலைகள் அதிகமாக இருந்தன. அதன் பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில்  கொரோனா பொது முடக்கம் காரணமாக மீண்டும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

ஜப்பானில் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version