Home உலகச் செய்திகள் ரோகிங்கியா விவகாரம்- மியான்மாருக்கு ஐ.நா எச்சரிக்கை

ரோகிங்கியா விவகாரம்- மியான்மாருக்கு ஐ.நா எச்சரிக்கை

ரோகிங்கியா  முஸ்லீம்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா எச்சரித்துள்ளது. 

மனித உரிமைகளுக்கான ஐ.நாவின்  ஆணையாளர்  மிசெல் பாச்செலெட் (Michelle Bachelet), மியான்மரின் சிறுபான்மையினருக்கு எதிரான போர்க்குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

UN warns of 'further war crimes' in Myanmar's Rahkine

மியான்மரில் ரெக்கையின் (Rakhine)  மற்றும் சின் (Chin) மாநிலங்களில் வசிக்கும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் போர்க்குற்றங்கள் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரோகிங்கியாக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 2017ல் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள், ரெக்கையின் மாநிலத்தில் இருந்து வங்கால தேசத்திற்கு அகதிகளாக வெளியேறினர். இந்த வழக்கு ஐ.நாவின் சிறப்பு நீதி மன்றத்தில் நிழுவையில் உள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்ற 45ஆவது மனித உரிமைக்கழக கருத்தரங்கில் பேசிய போது தொடர்ந்து மியான்மரில் ரோகிங்கியாக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மியான்மரில் காணாமல் போவது சட்டத்திற்கு அப்பாட்பட்டுக் கொல்லப்படுவது பெருமளவில் மக்களின் இடப்பெயர்ச்சி, கைது செய்யப்படுதல், துன்புறுத்தப்படுதல், சிறையில் மரணம், மக்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் போன்றவை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரோகிங்கியாக்களின் கிராமங்களின் பெயர் நீக்கப்படுதலும் வரைபடத்தில் இருந்து நீக்கப்படுவதும் நிலங்களின் எவ்வாறு பயன்படுத்துவது என்ற திட்டமிடுதலும் நடைபெறுவதாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்ட அவர், இந்த நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வட ரெக்கையினில் பல இடங்கள் எரிக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாகவும்  மிசெல் பாச்செலெட்  தெரிவித்துள்ளார்.

எனவே மியான்மரில், சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையே இன்றைய நிலை எனக் கூறினார்.

இந்நிலையில்,மியன்மரின் இராணுவம், 2017 மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கையே என்று நியாயப்படுத்தியுள்ளதோடு, அவர்களுக்குக் குடியுரிமையும் அடிப்படை உரிமைகளும் வழங்கத் தேவையில்லை எனவும் கூறியுள்ளது.

Exit mobile version