Tamil News
Home உலகச் செய்திகள் 4400 ஆண்டு கால மர்மம் விலகியது பிரமிட் திறக்கப்பட்டது

4400 ஆண்டு கால மர்மம் விலகியது பிரமிட் திறக்கப்பட்டது

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 4400 ஆண்டு பழமையான பிரமிட் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அங்கு புதையல், பொக்கிஷங்கள், மன்னர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் என்பன இருக்கின்றன.

இந்த அதிசய பிரமிட் கெய்ரோ நகரத்தின் மேற்குப் பகுதியில் பத்து மைல் தொலைவில் உள்ளது.

இதை கட்டுவதற்காக ஒரு மைல் நீளம், ஒரு மைல் அகலம் உடைய சதுர பூமியை  பயன்படுத்தியிருக்கின்றனர்.

இதன் நான்கு மூலைகளும் மிகவும் சரியாக பூமி மட்டம் பார்த்தே கட்டப்பட்டிருக்கின்றது. இதற்காக ஒரு சதுர மைலுக்கு பிரமிட்டை சுற்றி குறுகிய அகலமுள்ள பள்ளம் தோண்டி, அந்த பள்ளத்தில் தண்ணீரை நிறைத்து நிலமட்டம் பாரத்து, ஒரு அங்குலம் கூட ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் சமப்படுத்திய பின்னர் தான் அங்கு அத்திவாரம் தோண்டியிருப்பதாக கூறுகின்றார்கள்.

கி.மு.4400 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் நாகரிகத்தின் உச்சக் கட்டத்தில் இருந்திருக்க வேண்டும். கட்டடக் கலை,  வடிவமைத்தல் முதலியவற்றில் இவர்கள் வல்லவர்களாக இருந்திருக்க வேண்டும்.

இல்லையெனில் இவர்கள் எப்படி இவ்வளவு அற்புதமான கிஸா பிரமிட்டை உருவாக்கியிருக்க முடியும். இந்தக் கட்டுமானத்திற்கு மட்டும் 26 இலட்சம் கருங்கற்பாறை கற்கள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதில் ஒவ்வொரு கல்லும், இரண்டு முதல் எழுபது தொன் வரையுள்ள கற்களை சதுரமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ வெட்டியெடுத்து, அவற்றை ஒழுங்காக செதுக்கி சீர்ப்படுத்தி, ஒன்றன் மேல் ஒன்றாக பிரமிட் வடிவத்தில் 450 அடி உயரத்தில் கட்டியிருக்கிறார்கள்.

இதைப் பார்த்து உலகமே பிரமிக்கின்றது. கற்கள் எல்லாம் நன்றாக செதுக்கப்பட்டு ஒரு அங்குலத்தில் நூறில் ஒரு பங்குகூட இடைவெளி இல்லாது சேர்த்து வைத்திருக்கின்றார்கள்.

இதன் உயரம் 450 அடி அதாவது 45 மாடிக் கட்டிடத்தின் உயரம் உள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

செங்குத்தாக நான்கு முக்கோணங்களை சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது மாதிரியே, இந்தப் பிரமிட்டின் தோற்றமும் அளவுகளும் இருக்கும்.

ஒரு சதுர மைல் பரப்பளவில் 450 அடி உயரத்தில் இவ்வளவு பிரமாண்டமான பிரமிட்டை கட்டியது மட்டுமல்லாமல், அதற்கு மேல் வெள்ளை சுண்ணாம்பு பாறைக் கற்களைக் கொண்டு வந்து இந்தப் பிரமிட் முழுவதும் போர்வை போல் போர்த்தியும் இருக்கிறார்கள் என்றால் இவர்களது திறமையை என்னவென்று சொல்வது.

இந்த பிரமிட்டை கட்டுவதற்கு, வானசாஸ்திரம், புவியியல் சாஸ்திரம் மற்றும் கட்டிடக்கலை, தொழில்நுட்பம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய அறிவு, பஞ்சபூதங்களின் தன்மை முதலியவற்றில் வல்லவர்களுடைய உதவி இல்லாமல் இதைக் கட்டியிருக்க முடியாது என்பது ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

மேலும் பிரமிட்டின் உள்ளே இருந்து வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள், கிரக நிலைகளைக்கூட பார்க்கக்கூடிய வசதிகளை அனுசரித்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

பிரமிட்டின் சக்திக்கும் மேலே சொல்லப்பட்ட சில விடயங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் இதுவரை ஒருமித்த கருத்து வரவில்லை.

ஆனால் பிரமிட்டின் உள்ளே ஒரு மாபெரும் சக்தி இயங்குவதாக மட்டும் அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்கின்றார்கள்.

இங்கு கட்டப்பட்ட பிரமிட்டுகளிலேயே மிகவும் வியப்பிற்குரிய ஒன்று கய்சா ப்லாடீவ் (Giza Plateaw)  இதில் என்ன அப்படி சிறப்பு என்றால் இவை உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன.

26,00,000 பாறைகள் இதனை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஆரங்கள் மென்மையாகத் தேய்த்து துளியும் சந்து இல்லாமல் பொருத்தியிருக்கின்றார்கள்.

இறுதிக் கணக்கின்படி இந்த பிரமிட் 890 ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

எகிப்து நாட்டில் பரமிட்டுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச்சிலை உண்டு. அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கின்றது.

இதே போன்ற ஓர் உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிட்டுகளுக்கு அருகே காணப்படுவதாக சோவியத் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இந்நிலையில் எகிப்தில் உள்ள 4400 ஆண்டு பழைமையான பிரமிட் திறக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மர்மங்கள் நிறைந்து இருந்தாலும், தற்போது வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளனர். அங்கு 5 சுரங்க வாயிற்குழி கதவுகளில் ஒன்றுகூட இதுவரை திறக்கப்பட்டு களவாடப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீலிடப்படாத ஒன்றை மட்டும் திறந்த போது குப்பைகள் மட்டுமே இருந்ததாகவும், எஞ்சியவற்றில் பதப்படுத்தப்பட்ட உடல், இறந்தவர் பயன்படுத்திய ஆடை, அணிகலன், உள்ளிட்ட பொக்கிசங்களும் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மன்னர்கள் பயன்படுத்திய நகை, வைரம், வைடூரியம், தங்கம், செம்பு உள்ளிட்ட, ஆடை ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொக்கிசங்கள் இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இவை கிடைத்தால், பிரமிட்டுகளின் மீது உள்ள மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version