Home செய்திகள் ஓகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவை கொரோனாவின் 3ம் அலை தாக்கலாம் -ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

ஓகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவை கொரோனாவின் 3ம் அலை தாக்கலாம் -ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

Corona 1 20200807 1 571 855 ஓகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவை கொரோனாவின் 3ம் அலை தாக்கலாம் -ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐ.சி.எம்.ஆர் (Indian Council of Medical Research) தன் கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. 

ஆனால் இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது என்றும் ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

“ஒவ்வொரு மாநிலமும் தங்களது கொரோனா பாதிப்பு குறித்து தங்களிடம் இருக்கும் தரவுகளை ஆராய்ந்து, மாநிலம் கொரோனாவின் எந்த நிலையில் இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

“முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வில்லை எனில், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர் கொள்வார்கள்” என ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

Exit mobile version