Tamil News
Home செய்திகள் ஜப்பானிடமிருந்து 38 மில்லியன் டொலர்கள் மானியம்

ஜப்பானிடமிருந்து 38 மில்லியன் டொலர்கள் மானியம்

அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலரை மானியமாக வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையின் சுகாதாரத் துறையின் சுகாதார விநியோக முறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 பில்லியன் ஜப்பானிய யென்னை (சுமார் 38 மில்லியன் அமெரிக்க டொலர்) வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணங்கியுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகளை தடையின்றி இயக்குவதை உறுதி செய்வதற்காக, எரிபொருளை முக்கியமாக டீசல் வழங்குவதற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version