Tamil News
Home செய்திகள் 2025 இற்குள் மீள்குடியேற்றம் முற்றுப்பெற வேண்டும்: ஜனாதிபதி யாழில் உத்தரவு

2025 இற்குள் மீள்குடியேற்றம் முற்றுப்பெற வேண்டும்: ஜனாதிபதி யாழில் உத்தரவு

2025 ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்திரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ் செயலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

நான்கு நாள் விஜயமான ஜனாதிபதி இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளதுடன், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதனால் இந்தப் பகுதியில் கடுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version