Home ஆய்வுகள் 2024 ஆம் ஆண்டு உலகில் ஏற்படப்போகும் பொருளாதார மாற்றங்கள்

2024 ஆம் ஆண்டு உலகில் ஏற்படப்போகும் பொருளாதார மாற்றங்கள்

அடுத்த வருடம் என்ன நடைபெறும் என்பதை டென்மார்க்கைத் தளமாகக் கொண்ட சக்சோ வங்கி எதிர்வு கூறியுள்ளது. வங்கியின் எதிர்வுகூறல் உலகின் அரசியல், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மையங்களை ஆட்டங்கண வைத்துள்ளதுடன் அவை சாத்தியமாகவும் தென்படுகின்றது.

trump biden 2 2024 ஆம் ஆண்டு உலகில் ஏற்படப்போகும் பொருளாதார மாற்றங்கள்எதிர்வரும் வருடம் அமெரிக்காவின் செலவீனங்கள் மேலும் அதிகரிக்கும். தனது பொருளாதாரத்தை தக்கவைப்பதற்காக அமெரிக்கா அதிக நிதியை கடனாக பெறும். நாட்டில் சமூகங்களுக்கிடையில் கிளர்ச்சி எற்படுவதை தடுப்பதற்கு அமெரிக்காவுக்கு இது தேவையாக இருக்கும். பணவீக்கம் காரணமாக அமெரிக்காவின் திறைசேரி கடும் நெருக்கடிகளை சந்திக்கும். பல நாடுகள் அமெரிக்காவில் உள்ள தமது பணத்தை வெளியே கொண்டுசெல்ல முயற்சிப்பார்கள். வருமானத்திற்காக அரச பிணைமுறிகளை அமெரிக்கா வரியில்லாமல் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பரில் இடம்பெறும் தேர்தலில் மூன்றாவது கட்சியின் வேட்பாளரான றொபேட் எப். கெனெடி ஜுனியர் வெற்றியீட்டுவார். அதன் மூலம் அமெரிக்காவில் புதிய அரசியல் சரித்திரம் ஆரம்பமாகும். இது உலகில் போர்களைத் தவிர்க்கவும், அமைதி மற்றும் பாரபட்சமற்றமுறைகள் ஏற்படவும் உதவும்.

உலக மக்களின் ஆரோக்கியமற்ற வாழ்வு அதிகரிக்கும், எடை குறைக்கும் மருந்துகளை அதிக மக்கள் உள்ளெடுப்பதுடன், உடற்பயிற்சி செய்வதை மக்கள் நிறுத்துவதும் அதிகரிக்கும். ஆரோக்கிமற்ற உணவுப் பாவனை அதிகரிக்கும். இதனால் கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் விற்பனை அதிகரிக்கும். மக்டோனால்ட் மற்றும் கொக்கோ கோலா போன்றவற்றின் பங்கு சந்தை விலைகள் 60 விகிதம் அதிகரிக்கும்.

President of the European Council Charles Michel, Italy’s Prime Minister Giorgia Meloni, Canada’s Prime Minister Justin Trudeau, France’s President Emmanuel Macron, Japan’s Prime Minister Fumio Kishida, U.S. President Joe Biden, Germany’s Chancellor Olaf Scholz, Britain’s Prime Minister Rishi Sunak and European Commission President Ursula von der Leyen participate in a family photo with G7 leaders before their working lunch meeting on economic security during the G7 summit, at the Grand Prince Hotel in Hiroshima, Japan, May 20, 2023. REUTERS/Jonathan Ernst/Pool

ஐரோப்பிய ஒன்றியம் செல்வந்தர்களுக்கான வரி அறவீட்டை 2 விகிதம் அதிகரிப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் தமது செலவீனங்களை சமாளிக்க முற்படும். அது ஐரோப்பிய ஒன்றிய மக்களின் ஆடம்பரவாழ்வை பாதிக்கும். இதனால் எல்.வி.எம்.எச் மற்றும் போர்ஸ் போன்றவற்றின் பங்குகள் 40 விகிதம் வீழ்ச்சி காணும்.

நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு செயற்கை நுண்ணறிவு மிகவும் அச்சுறுத்தலாக மாறும். உயர் அதிகாரத்தில் உள்ளவர்களை போலியாக காண்பிக்கும் நிகழ்வுகள் அதிகரிக்கும். போலியான தகவல்கள் அதிகம் பரப்பப்படும் மற்றும் போலியான உயர் அதிகாரிகள் போன்ற தோற்றப்பாடுகள் அதிகளவு உருவாக்கப்படுவதால் பல நாடுகள் செயற்கை நுண்ணறிவை தடை செய்யும் சட்டங்களை கொண்டுவரும். எனவே சிறிய குழுவே செய்திகளை பரப்புவதற்கு அனுமதிக்கப்படும்.

உலகம் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். பணவீக்கம் அதிகரிப்பதால் வட்டிவிகிதத்தை நாடுகள் குறைக்கமுடியாத நெருக்கடிகளை சந்திக்கும். நாடுகள் மிகப்பெரும் கடன்சுமைக்குள் விழும். வாரவுசெலவுத்திட்டத்தில் மிகப்பெரும் பற்றாக்குறை ஏற்படும். அது றோம் கிளப்பை உருவாக்கும். அது உலகின் வர்த்தக நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை கையாளும்.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரேசில், இந்தியா, கனடா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக சீனா, ஜேர்மனி, நோர்வே, யப்பான், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்துடன் பொருளாதார பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்.

தங்கம், வெள்ளி மற்றும் கிறிப்போகரன்சி ஆகியவற்றின் மதிப்புக்கள் உயரும். அவையே நாடுகளின் கையிருப்பாக மாற்றமடையும்.

யப்பானின் பொருளாதாரம் எதிர்பார்க்காத அளவுக்கு வளர்ச்சியடையும், அடுத்தவருடம் அது 7 விகிதமாக வளரலாம். யப்பான் வங்கியின் கொள்கையில் மாற்றம் ஏற்படும். யப்பான் மக்களின் ஊதியமும் 4 விகிதம் அதிகரிக்கும்.

எண்ணைவிலை பரலுக்கு 150 டொலர்களாக அதிகரிக்கும். அதாவது தற்போதைய விலையைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும். உலகில் உள்ள கால்பந்தாட்ட அணிகள் பலவற்றை எண்ணைவளம் கொண்ட நாடுகள் வாங்கிக்கொளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில்: ஆர்தீகன்

Exit mobile version