Home செய்திகள் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

439 Views

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள இழப்பீட்டுக்கான அலுவலகம் எமக்கு தேவையற்றது எனவும் அதனை எதிர்த்தும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் 1022 ஆவது நாளாக பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மாலை மேற்படி விடயத்தினை வெளிக்கொணரும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்துகொண்டு இழப்பீட்டு அலுவலகம் எமது பிள்ளைகளை மீள ஒப்படைக்குமா? எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version