Home செய்திகள் வடக்கு கிழக்கில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்பு

வடக்கு கிழக்கில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்பு

rain வடக்கு கிழக்கில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புநாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை வெப்பச் சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளா் நபமமுத்து பிரதீபராஜா தெரிவித்தாா்.
இது தொடா்பில் அவா் மேலும் தெரிவித்தவை வருமாறு-
எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமையும். (இது இன்றைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலான கணிப்பாகும். இதில் சில மாற்றங்களும் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்க).
ஆனாலும் இக் காலத்தில் தோன்றுகின்ற தாழமுக்கங்கள் பங்களாதேஷ் அல்லது மியன்மாரை நோக்கியே செல்வதுண்டு. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.
அத்தோடு நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை வெப்பச் சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும். எனவே இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை படிப்படையாக குறைவதால் காற்று குளிர்ச்சியடைந்து முகில்கள் உருவாகின்றன. இந்த முகில்கள் பனி விழும் நிலையை அடையும்போது மழைப்பொழிவு உருவாகிறது. இதுவே வெப்பச் சலன மழை எனப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும். எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு தற்போது நிலவும் அதிகளவிலான வெப்பநிலையே நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version