Tamil News
Home உலகச் செய்திகள் ரோஹிங்யா மக்களை துடிதுடிக்க படுகொலை செய்தோம் – முன்னாள் வீரர்களின் வாக்குமூலம்

ரோஹிங்யா மக்களை துடிதுடிக்க படுகொலை செய்தோம் – முன்னாள் வீரர்களின் வாக்குமூலம்

மியான்மாரில் இராணுவத் தளபதிகளின் உத்தரவுகளை ஏற்று நூற்றுக் கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்களை சுட்டுப் படுகொலை செய்ததாக முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் அளித்திருக்கும் வாக்குமூலம் உலகையே அதிர வைத்துள்ளது.

21ஆம் நூற்றாண்டில் உலகை உலுக்கிய சம்பவமாக மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை. ரோஹிங்யா மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து மியான்மாரை விட்டு துரத்தியது. இலட்சக் கணக்கான ரோஹிங்கியர்கள் அகதிகளாக நாடு விட்டு நாடு ஓடினார்கள். அப்படி சென்றவர்களில் பல்லாயிரக் கணக்கானோரை மியான்மார் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு நடைபெறுகின்றது. ஆபிரிக்காவின் காம்பியா நாடு தான் இது தொடர்பான வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜனநாயகப் போராளியாக புகழப்பட்ட ஆன்சாங் சூகி, போர்க் குற்றம் சுமத்தப்பட்ட அரசிற்காக அரசின் ஆலோசகராக நேரில் ஆஜரானார்.

இதேவேளை மியான்மார் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 2 வீரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் திஹேக் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹிங்யாக்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், புதைத்து விடவும் உத்தரவு வந்ததாகவும், அதன்படி ரோஹிங்யா முஸ்லிம்களை படுகொலை செய்ததாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.

Exit mobile version