Home செய்திகள் ரஸ்யாவுக்கு சென்ற ஹமாஸ் பிரதிநிதிகள் – இஸ்ரேல் சீற்றம்

ரஸ்யாவுக்கு சென்ற ஹமாஸ் பிரதிநிதிகள் – இஸ்ரேல் சீற்றம்

ரஸ்யாவுக்கு ஹமாஸ் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் சென்றது இஸ்ரேலை கடும் சினமடைய வைத்துள்ளது. அவர்களை மொஸ்கோவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த வியாழக்கிழமை சென்ற ஹமாஸ் அமைப்புடன் ஈரானின் பிரதி வெளிவிகார அமைச்சரும் மொஸ்கோ சென்று இணைந்துள்ளது பல எதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

ஹமாஸ் – ரஸ்யா – ஈரான் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் அங்கு பேச்சுக்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பணயக்கைதிகளை விடுவித்தல், மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துதல் மற்றும் போர்நிறுத்தம் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் அங்கு ஆராயப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

Iran hamas moscow ரஸ்யாவுக்கு சென்ற ஹமாஸ் பிரதிநிதிகள் - இஸ்ரேல் சீற்றம்

Exit mobile version