Tamil News
Home செய்திகள் ரணிலை ஆதரிப்பதற்கு மெகா கூட்டணி? கொழும்பில் விஷேட சந்திப்பு

ரணிலை ஆதரிப்பதற்கு மெகா கூட்டணி? கொழும்பில் விஷேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி என்பன இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கான முன்னோட்ட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இச்சந்திப்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய கூட்டணிக்கான ஆரம்பக்கட்ட பேச்சுகள் நடைபெற்றுள்ளதுடன், அடுத்துவரும் நாட்களில் கட்சிகளை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி சந்திப்பை நடத்துவார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி, அதற்காக ஆதரவளிக்குமாறு தோழமைக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் (குதிரைசின்னம்), செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (சேவல் சின்னம்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி
(வீணை சின்னம்) என்பனவும் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version