Tamil News
Home செய்திகள் முருகனை சந்திப்பதற்கான வழக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்

முருகனை சந்திப்பதற்கான வழக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் நளினி மற்றும் உறவினர்கள் அவரை சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரை நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கில், 2வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் அண்மையில் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். இதை எதிர்த்து இவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதேவேளை முருகனை தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும், அவரை நளினியும் உறவினர்களும் சந்திக்க வேண்டுமெனக் கோரியும் முருகனின் உறவினரான தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (01) எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய நீதிபதிகள் விசாரித்தனர். இது தொடர்பாக 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

 

Exit mobile version