Home செய்திகள் மீன்பிடி, விவசாய அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் களவிஜயம்

மீன்பிடி, விவசாய அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் களவிஜயம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் காணப்படும் விவசாயம் ,மீன் பிடிதொடர்பிலான பிரச்சினைகளை ஆராய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி சனிக்கிழமை (23) கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

kuchchaveli fisheries மீன்பிடி, விவசாய அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் களவிஜயம்விவசாய சம்மேளனங்களின் வேண்டுகோளை ஏற்று குறித்த விஜயத்தை மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர்  மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். இலந்தைக்குளம்,குச்சவெளியான் குளம் புனரமைப்பு மற்றும் அனுமதிப்பத்திரமுள்ள  வயல் காணிகளை விடுவிப்புச் செய்து தருமாறும் விவசாயிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மீன் பிடி தொடர்பில் ஜாயா நகர் சல்லி முனைப் பகுதியில் இறங்கு துறை அமைப்பது பற்றியும் மீனவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.மகா ஆலங்குளத்திலிருந்து குச்சவெளி விவசாய செய்கைக்கான நீர்ப்பாசன விரிவுபடுத்தல் நெற்செய்கை நோய் தாக்கம் போன்ற பல விடயங்களை விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்தனர் இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத் தருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் விவசாயிகளிடத்தில் தெரிவித்தார்.

இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,பிரதேச செயலாளர்,நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள்,விவசாய மீனவ சம்மேளனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version