Home உலகச் செய்திகள் மியான்மரில் காலவரையற்று இணையத்தளம் முடக்கம் – இராணுவம் நடவடிக்கை

மியான்மரில் காலவரையற்று இணையத்தளம் முடக்கம் – இராணுவம் நடவடிக்கை

மியான்மரில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அந்நாட்டு இராணுவம், தற்போது காலவரையற்று இணையத்தளத்தை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மேலும் இராணுவம் அங்குள்ள பெரும்பாலான ஊடகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது - BBC  News தமிழ்

இந்நிலையில் அந்நாட்டின் மத்திய போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், அடுத்த அறிவிப்பு வரும்வரையில் காலவரையற்று இணையம் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மியான்மரில் இராணும் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்று வரையில் 529 பொது மக்களை இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version