Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இரண்டாவது நாளாக போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ மியான்மரில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க மறுத்த இராணுவம், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது.

ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

இந்நிலையில், மியான்மரில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று  சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version