Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மரில் தொடரும் இரவு நேர கைதுகள் -அச்சத்தில் மக்கள்

மியான்மரில் தொடரும் இரவு நேர கைதுகள் -அச்சத்தில் மக்கள்

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை இரவுநேரத்தில் கைதுசெய்யும் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சநிலை அதிகரித்துள்ளது.

மியான்மரின் பல பகுதிகளில் தூக்கமற்ற இரவுகள் வழமையாகிவிட்டன என தெரிவித்துள்ள பிபிசி செய்தியாளர், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் இரவுநேரங்களில் வீடுகளை சோதனையிட்டு கைதுகளை மேற்கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

‘’இராணுவ ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களையே அவர்கள் இவ்வாறு கைதுசெய்கின்றனர். மக்கள் இரவுநேரங்களில் கண்விழித்திருந்து ஒருவரையொருவரை பாதுகாக்கின்றனர்.  மக்கள்அச்சமடைந்தவர்களாக பதற்றமடைந்தவர்களா அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரியாதவர்களாக மாறிவருகின்றனர். சமூக ஊடகங்களில் எங்கள் இரவுகள் பாதுகாப்பற்றவை என்ற தகவல்களை மியான்மர் மக்கள் வெளியிட்டு வருகின்றனர்’’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், இரவுநேர கைதுகள் அதிகரிக்கின்றன என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் பில்ரொபேர்ட்சன் இரவுகளில் மக்கள் வீடுகளில் இருந்து இழுத்து செல்லப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version