Tamil News
Home செய்திகள் மாலைதீவு ஜனாதிபதிக்குள்ள முதுகெலும்பு இங்குள்ள ஆட்சியாளா்களுக்கு இல்லை – விமல் வீரவன்ச

மாலைதீவு ஜனாதிபதிக்குள்ள முதுகெலும்பு இங்குள்ள ஆட்சியாளா்களுக்கு இல்லை – விமல் வீரவன்ச

இந்திய அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படும் மாலைதீவு ஜனாதிபதிக்குள்ள முதுகெலும்பு இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இல்லை” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“உலகில் பிரிக்ஸ் கூட்டணி உள்ளது, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன, மேலும் சில நாடுகளும் இணைத்துக்கொள்ளப்பட வுள்ளன. இந்த பிரிக்ஸ் கூட்டணியுடன் உறவை வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் வங்கியொன்றைக்கூட ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியுடன் செயற்படக்கூடிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

இந்தியாவின் தாளத்துக்கேற்ப ஆடாத ஒருவர் மாலைதீவு ஜனாதிபதியாக வந்துள்ளார், இதனால் மாலைதீவை புறக்கணிப்போம் என்ற பிரசாரம் இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலைதீவு செல்வதை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி சீனாவுக்கு சென்று, அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து, அதிகளவு சீன சுற்றுலாப் பயணிகளை அனுப்புமாறு கோரியுள்ளார். இந்திய அழுத்தத்துக்கு மாலைதீவு ஜனாதிபதி அடிபணியவில்லை, மண்டியிடவில்லை, மாலைதீவு ஜனாதிபதிக்குள்ள முதுகெலும்பு இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இல்லை” என்றார்.

Exit mobile version