Tamil News
Home செய்திகள் மாத்தள விமான நிலையம் தரமுயர்த்தப்படுகின்றது விமான சேவைகள் நிறுவனத் தலைவர்

மாத்தள விமான நிலையம் தரமுயர்த்தப்படுகின்றது விமான சேவைகள் நிறுவனத் தலைவர்

மாத்தள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வேலைத் திட்டத்திற்குரிய பிரிவினரின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பாக சகல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அத்தோடு சர்வதேச விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கரை ஆண்டு காலப்பகுதியில் மாத்தள விமான நிலையத்தின் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை என எடுத்துக் காட்டிய அவர், ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version