Home செய்திகள் ‘மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை

‘மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த மக்களின் அவல நிலை குறித்து முக நுால் பதிவு ஒன்றில்,இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
“முதல் மாதம் –அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து எமது மாவட்டத்திற்குள் அத்துமீறி காணிகளை பிடித்தார்கள். காடுகளை அழித்தார்கள். முறையிட்டோம்.
ஆளுநர் சொன்னார், சோளம் நாட்ட வந்தவர்கள் 3 மாதத்தில் போய்விடுவார்கள் என்று.
இரண்டாம் மாதம் சொந்த மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த பண்ணையாளர்களை விரட்டி அடித்தார்கள். கோறிக்கை வழங்கினோம்.
மாடு பயிரை மேய்கிறதாம் என்கிறார்கள். இந்த நாட்டின் வேலியே இனவாதம் முற்றி பயிரை மேய்வதை மறைத்து விட்டார்கள்.
மூன்றாம் மாதம் முடிந்து போனதும் அங்கே 8ஆயிரம் ஏக்கர் அபகரிக்கப்பட்டிருந்தது. மன்னிக்கவும் அம்பாரை, பொலன்னறுவை மாவட்ட ஏழை சிங்கள மக்களால் பயிர் செய்கைக்காக மாத்திரம் துப்பரவு செய்யப்பட்டிருந்தது. போராடினோம்.
கூடி பேசி முடிவெடுப்போம் என்றார்கள். எத்தனை தடவை யாரோடு பேசினார்களோ தெரியவில்லை.
நான்காம் மாதம் அவர்களின் போதை தலைக்கேறிப்போனது. பண்ணையாளர்களை கட்டி வைத்து அடித்தார்கள்.
Image may contain: 1 person, sitting and outdoor
5அறிவு மாடுகளை 6 அறிவு மிருகங்கள் கொன்று குவித்தன.
இனி என்ன செய்வது?
உறவை சொல்லி கூடவே வளர்த்த மாடுகளை இழந்தோம்.
சொந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியவில்லை.
வாழ்வாதாரம் படுகுழியில் வாழவும் இனி வழியில்லை.
இனி இழப்பதற்கு உயிர் ஒன்றே மிச்சம்.
அவர்களின் நிகழ்ச்சி நிரல் இனிதே நிறைவேறுகிறது.
மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும். வெளியேறு என அவர்கள் மொழியில் கூறிவிட்டார்கள்.
தமிழன் இந்த நாட்டின் பிரஜை என்று நாம் தாவறாகத்தான் நினைத்து விட்டோம்”
Exit mobile version