Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக  மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் மரக்கன்றுகளும்  அகற்றப்பட்டன.

மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில்  இன்று  தரவையில் இந்த கண்டனம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தரவை மாவீரர் துயிலும் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானமான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படுகின்றது.தொடர்சியாக கார்த்திகை 27ம் நாளில் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இராணுவமும் அரச புலானாய்வு துறையும் இணைந்து மரநடுகை என்ற போர்வையில் மேற்க்கொண்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இராணுவத்தினரால் நடப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு வன இலாக தினைக்களத்தின் புதிதாக பெயர் பலகை இடப்பட்ட நிலையில் போராட்டக்காரர்களால் இன்று அந்த பெயர்ப்பலகையும் உடைத்தெரியப்பட்டுள்ளதுடன் அங்கு நடப்பட்ட மரக்கன்றுகளும் பிடுங்கியெறியப்பட்டன.

மேலும் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை மக்களிடம் வழங்க கோரியும், இராணுத்தினரை பிரதேசத்தில் இருக்கு வெளியேறுமாறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேந்திரன் ,மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவான், ஏறாவூர்பற்று பி ரதேச சபை தவிசாளார் சர்வானாத்தா தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மட்டு மாவட்ட அமைப்பாளார் த.சுரேஸ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version