Tamil News
Home செய்திகள் மகிழ்ச்சியான நாடுகள்; பின்செல்லும் இலங்கை – 128 ஆவது இடத்தில்

மகிழ்ச்சியான நாடுகள்; பின்செல்லும் இலங்கை – 128 ஆவது இடத்தில்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 128ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 127ஆவது இடத்தை இலங்கை பெற்றிருந்த நிலையில் ஓரிடம் பின்தங்கியுள்ளது.

இதேநேரம், மகிழ்ச்சியான நாடுகளின் பட் டியலில் 7ஆவது முறையாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நோர்வே, லக்சம்பேர்க், சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இதேநேரம், இந்தியா 126ஆவது இடத்தையும் சீனா 60, பாகிஸ்தான் 108, நேபாளம் 93, பங்களாதேஷ் 129ஆவது இடங்களை பிடித்துள்ளன. கடைசி இடமான 137ஆவது இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வருடாந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான
தீர்வுகள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுள் காலம், வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, அநீதிகள் மற்றும் ஊழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெளியானது.

Exit mobile version