Tamil News
Home செய்திகள் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம்

பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம்

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள் அடையாளப்படுத்த திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் 28வது மாதாந்த அமர்வு சபையின்   தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்   வியாழக்கிழமை(11)  காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.

சென்ற மாத கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து சபையின் ஆரம்ப நிகழ்வாக கடந்த கால விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி நடவடிக்கைகளுக்காக தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள் அடையாளப்படுத்த திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட பூர்வீக தமிழர் நிலங்கள் பறிபோகும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தான் அதிக இடங்கள் தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தமிழ் பேசும் சமூகத்தை திட்டமிட்ட முறையில் நசுக்க முனைகிறது என உறுப்பினர்  ஏ.ஆர்.மொகமட் பஸ்மீர் பிரேரணையை கொண்டு வந்து உரையாற்றினார்.

தொடர்ந்து  இலங்கையில் கடந்து வந்த ஜனாதிபதிகளும் இனிவரும் காலங்களில் வரும் ஜனாதிபதியும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை தொடர்ந்தும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அவை திசைமாறிச் சென்று ஆனால் ஒரே ஒரு போராட்ட இயக்கம் 30 வருட கால தமிழ் மக்களின் இருப்புக்காக போராடி இருந்து அவர்கள் இன்று இல்லை என்ற நிலையில் பல தமிழர் தாயகப் பிரதேசங்களில் அடக்குமுறைகள் தோற்றம் பெற்றுள்ளன என உறுப்பினர் இராசையா மோகன் தெரிவித்த நிலையில் இறுதியாக கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி நடவடிக்கைகளுக்காக தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள் அடையாளப்படுத்த திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

Exit mobile version