Home ஆய்வுகள் போரை எதிர்கொள்ள முடியாத கவலையில் அமெரிக்கா

போரை எதிர்கொள்ள முடியாத கவலையில் அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனின் அதிகாரிகளை அதிக கவலைகள் சூழந்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட த பொலிற்றிக்கோ என்ற ஊடகம் புதன்கிழமை(20) தெரிவித்துள்ளது.

அதற்கான காரணம் ஏமனின் ஹதீஸ் படையினர் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களே. ஏமன் படையினர் செங்கடல் பகுதியில் மேற்கொள்ளும் ஆளில்லாத தாக்குதல் விமானம் மற்று ஏவுகணைகளை முறியடிப்பதற்கு அதிகளவு செலவாவதே அமெரிக்காவை சூழ்ந்துள்ள கவலைகள்.

missile போரை எதிர்கொள்ள முடியாத கவலையில் அமெரிக்காசெங்கடலின் ஊடான பயணத்தை நிறுத்துவதான 6 இற்கு மேற்பட்ட பெரிய கப்பல் நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த செய்தியை பொலிற்றிக்கோ வெளியிட்டுள்ளது. பல நாடுகளின் கப்பல்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டதுடன், ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

செங்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா கடற்படையினரால் இதனை தடுக்க முடியாது போவதும் அந்த பகுதியின் ஊடாக போக்குவரத்து முடங்கும் நிலையை ஏற்படுத்திள்ளதுடன், உலகின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காணவைக்கலாம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஆனால் தற்போது எழுந்துள்ள பிரச்சனை என்னவெனில் அமெரிக்காவினால் சமாளிக்க முடியாத செலவுமிக்க போர் தான்.

அதாவது கடந்த 2 மாதங்களில் 38 ஆளில்லாத தாக்குதல் விமானங்களையும், பல ஏவுகணைகளையும், அமெரிக்க கடற்படை சுட்டுவீழ்த்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் அமெரிக்காவின் கார்னி என்ற டிஸ்ரேயர் கப்பல் 14 ஆளில்லாத தாக்குதல் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளது. இது ஒரு தாக்குலில் மட்டும்.

அவற்றை சுட்டு வீழ்துவதற்கு அமெரிக்கா வானுக்கு ஏவும் சாம் வகை ஏவுகணைகளை பயன்படுத்துகின்றது. 2000 டொலர்கள் பெறுமதியான விமானங்களை சுட்டுவீழ்த்த 2 மில்லின் டொலர்கள் பெறுமதியான ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்துவது என்பது விமானத்தின் விலையைவிட எவுகணையின் விலை 1000 மடங்கு அதிகமாகும் என்பதாகும்.

அதாவது நாம் அவர்களின் விமானங்களை நாம் சுட்டுவீழ்த்தினாலும் அது அவர்களுக்கு தான் வெற்றி, அதாவது விமானங்களை சுட்டாலும் அவர்களுக்கு தான் வெற்றி, சுடாவிட்டாலும் அது எமது கப்பல்களை தாக்கினால் அவர்களுக்குத்தான் வெற்றி என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏயின் அதிகாரி மைக் மொல்றோய் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றை அழிப்பதற்கான மலிவான வழிகளை நாம் தேடவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

ஹதீஸ் அமைப்பினரின் தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றையும் வீழ்த்த 92 தொடக்கம் 130 கடல் மைல்கள் தூரவீச்சுக்கொண்ட Standard Missile-2 தேவைப்படுகின்றன. அவை 2.1 மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. ஆவற்றைவிட Sea Sparrow ஏவுகணை அல்லது airburst rounds ஏவுகணைகைளை பயன்படுத்தாலாம் ஆனால் அவற்றின் தூரவீச்சு குறைவானவை.

எனது கருத்தின்படி டிஸ்ரோயர் கப்பல் ஏஸ்.எம்-2 வகை ஏவுகணைகளை தான் பயன்படுத்துகின்றனர். விமானங்களை அதிக தொலைவில் வைத்து சுடவே அவர்கள் விரும்புகின்றனர். அருகில் வைத்து சுடுவது ஆபத்தானது என சி.ஐ.ஏ அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதல் விமானங்களின் விலை என்பது 2000 டொலர்கள் தான்.

ஆனால் அமெரிக்காவிடம் தற்போது பயன்படுத்தும் ஏவுகணைகளை விட மலிவான தெரிவுகள் இல்லை. அதனை அவர்கள் எட்டவேணுமெனில் நீண்ட நாட்கள் எடுக்கும் என கடற்படையின் மத்திய ஆய்வு மையத்தின் அதிகாரி சாமுவேல் பென்டெற் தெரிவித்துள்ளார்.

ஹதீஸின் தாக்குதல்களை தடுக்க பல நாடுகளை இணைத்து கடற்படை கூட்டணி ஒன்றை உருவாக்கப்போவதான கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் தெரிவித்தள்ளார். ஆனால் அமெரிக்காவின் அந்த திட்டம் மோல்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனவும், காசாவில் போர் நிறுத்தப்படும் வரையில் தாம் ஓயப்போவதில்லை எனவும் ஹதீஸ் படையினரின் பேச்சாளர் மொகமீட் அல் பக்காறி தெரிவித்துள்ளார்.

நூம் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் எம்மிடம் இன்னும் வெளியில் எடுக்காத பல நவீன ஆயுதங்கள் இருக்கின்றன. கடந்த 9 வருடங்களாக இந்த கூட்டணியினர் எம்மை அழிக்க முயன்றனர் அது முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

 

 

Exit mobile version