Tamil News
Home செய்திகள் இஸ்ரேலின் போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஹமாஸ்

இஸ்ரேலின் போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஹமாஸ்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை முற்றாக நிறுத்தும் வரையிலும் 40 கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்தம் என்ற இஸ்ரேலின் கொரிக்கையை நாம் ஏற்கப்போவதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மயில் ஹனியா எகித்துக்கு பயணம் மேற்கொண்டு எகிப்பத்தின் புலனாய்வுத்துறையின் தலைவர் மற்றும் ஏனைய அதிகாரிகளை போர் நிறுத்தம் மற்றும் கைததிகள் பரிமாற்றம் தொடர்பில் சந்தித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு வாரம் தாம் சண்டையை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக ஹமாஸிடம் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் வைத்த கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

முதல் தடவையாக பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பும் இந்த பேச்சுக்களில் கலந்துகொண்டிருந்தது. இரு அமைப்புக்களும் இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன்இ பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும்இ தங்களிடம் உள்ள 100 இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக இஸ்ரேல் தன்வசம் உள்ள எல்லா கைதிகளையும் விடுகவிக்க வேண்டும் எனவும் அவை தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் இடம்பெற்ற போர் நிறுத்தத்தின்போது ஹமாஸ் 105 கைதிகளையும், இஸ்ரேல் 240 கைதிகளையும் விடுவித்திருந்தன.

Exit mobile version