Home செய்திகள் போரில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற திறனாய்வுப் போட்டடி.!...

போரில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற திறனாய்வுப் போட்டடி.! வீடியோ இணைப்பு

நாட்டில் யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கள்ளிக்குளம் கருங்காலிக்குளம் கிராமத்தில் பாடசாலையின் அதிபர் புனிதவதி கிருபராசா தலைமையில் இன்று வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது.

கூலித் தொழிலை வாழ்வாதாரத்கைப் கொண்டு வாழும் பெற்றோரை பின்புலமாகக் கொண்ட கள்ளிக்குளம் கிராமத்தில் வாழும் வறிய மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் நோக்குடன் குறித்த விளையாட்டுப் போட்டி நிடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்கள் தமது விளையாட்டுத் திறன்களை ஆர்வத்துடன் வெளிப்படுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது. பின்தங்கிய பாடசாலையாக இருந்தாலும் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பில் மாணவர்களுக்கான இல்லங்கள் அழங்கரிக்கப்பட்டு குறித்த விளையாட்டு போட்டி நிகழ்வு கண்கவரும் வகையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

வலையக்கல்வி பணிமனை உத்தியோகத்தர் செந்தில்குமரன், வசதிப்படுத்தினர் ரவிச்சந்திரன், கிராமசேவையாளர் சர்வேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தல் மாரிமுத்து சுரேந்திரன் மாமடு பொலிஸ் பொறுப்பதிகாரி செனரத் பண்டார மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்து கொண்டு இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

DSC03919 Copy போரில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற திறனாய்வுப் போட்டடி.! வீடியோ இணைப்பு

Exit mobile version