Home செய்திகள் பெரும் போகச் செய்கை அறுவடையில் விவசாயிகள் பாரிய நஷ்டம்

பெரும் போகச் செய்கை அறுவடையில் விவசாயிகள் பாரிய நஷ்டம்

IMG 20240128 WA0007 பெரும் போகச் செய்கை அறுவடையில் விவசாயிகள் பாரிய நஷ்டம்பெரும்போக நெற் செய்கை தற்போது இயந்திரம் மூலமாக அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் விளைச்சலில் பாரிய நஷ்டங்களை எதிர் நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

முள்ளிப்பொத்தானை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தற்போது நெல் அறுவடை இடம் பெற்றாலும் போதிய விளைச்சல் கிடைக்காமை உரிய முறையில் பசளை கிருமி நாசினி கிடைக்காமையும் ஒரு வகை நோய் தாக்கம் போன்றனவற்ளாலும் சீரற்ற கால நிவையாலும் வேளாண்மை செய்கை அழிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இருந்த போதிலும் ஒரு ஏக்கருக்கு ஐந்து தொடக்கம் ஏழு மூடைகளை கிடைக்கப் பெறுகின்றன வெட்டுக் கூலி அதிகம் நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை காரணமாக கடனாளியாக மாறியுள்ளோம் எனவும் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் மூலமாக நிவாரணங்களை பெற்றுத் தர வேண்டும் உரிய திணைக்களங்கள் இதனை பார்வையிட்டு அழிவு தொடர்பில் மதிப்பீடு செய்து அதற்கான குழுவை நியமித்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் அப்போது தான் விவசாய நாடாக மாற்ற முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version