Home செய்திகள் பெரும்போக நெற் செய்கையில் பாரிய வீழ்ச்சி, விவசாயிகள் கவலை

பெரும்போக நெற் செய்கையில் பாரிய வீழ்ச்சி, விவசாயிகள் கவலை

IMG 20240124 WA0003 பெரும்போக நெற் செய்கையில் பாரிய வீழ்ச்சி, விவசாயிகள் கவலைதற்போது பெரும்போக நெற் செய்கைக்கான இயந்திரம் மூலமான அறுவடை இடம் பெற்றுவரும் நிலையில் தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள குரமொட்டி வெளி விவசாய நிலத்தில் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் உள்ள குரமுட்டி வெளி,கந்தளாய் தீவு, ஆணை இறக்கம் போன்ற விவசாய பகுதியில் சுமார் 600 ஏக்கர் வரை செய்கை பண்ணப்பட்டு அறுவடை இடம் பெற்று வருகிறது. அசாதாரண கால நிலையின் தாக்கம்,நோய் தாக்கம் போன்ற காரணங்களால் நெற் செய்கை வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கருக்கு ஐந்து மூடை அளவிலும் விளைச்சல் கிடைக்கிறது வெட்டுக் கூலி ஏக்கருக்கு 16000 ரூபா வரை செல்கிறது எல்லாச் செலவுகளும் போக மிஞ்சியிருப்பது ஒன்றுமே இல்லை எனவும் மனைவி பிள்ளைகளின் தங்க நகைகளை அடகு வைத்து செய்யப்பட்ட வேளாண்மை செய்கை இம் முறை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே தான் தங்களுக்கு தேவையான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறும் எதிர்கால சிறுபோக நெற் செய்கைக்கு தரமான பசளை கிருமி நாசினிகளை தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.

Exit mobile version