Home செய்திகள் பெரும்பான்மையினர் பகுதியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் -தமிழர் தாயகத்தில் போராட்டம்

பெரும்பான்மையினர் பகுதியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் -தமிழர் தாயகத்தில் போராட்டம்

இலங்கையில் இன்று சுதந்திர தின நிகழ்வுகள்  கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில்,  தமிழர் தாயகத்தில் குறித்த நாளை கரிநாளாகவும், உரிமை மற்றும் நீதிக்கான ஐ.நா நோக்கிய கவனயீர்ப்பு போராட்டங்களாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில்,  முழு சுதந்திர உணர்வோடு, அவர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியினை பறக்க விட்டு,  கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்  “எமக்கு இன்னும் ழுழுமையாக எந்ததொரு சமவுரிமையும் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் கரிநாளாக கறுப்புப் பட்டி அணிந்து தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

IMG 0156 பெரும்பான்மையினர் பகுதியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் -தமிழர் தாயகத்தில் போராட்டம்

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை  வலியுறுத்தியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version