Home செய்திகள் புவி வெப்பமடைவதை தவிர்ப்பதற்காக கண்டல் தாவரங்களை வளர்த்தல்

புவி வெப்பமடைவதை தவிர்ப்பதற்காக கண்டல் தாவரங்களை வளர்த்தல்

IMG 1708843474035 புவி வெப்பமடைவதை தவிர்ப்பதற்காக கண்டல் தாவரங்களை வளர்த்தல்ஒட்சிசனின் அளவை அதிகப்படுத்த கண்டல் தாவரங்கள் வளர்க்க வேண்டிய பிரதேங்களை பார்வையிட்டு உரிய வகையில் எதிர்காலத்தில் கண்டல் தாவரங்களை வளர்த்து எடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில், நிதி ஒதுக்கீட்டிலுமாக இவற்றை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் கிண்ணியாவுக்கு சென்று பார்வையிட்டனர்.

அச்சந்தர்ப்பத்திலே அதற்கான வழிகாட்டலையும் கண்டல் தாவரங்கள் வளர்க்க வேண்டிய இடங்களையும் நேரடி கள விஜயம் மேற்கொண்டு அவதானித்து உரிய விடயங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தி எதிர்காலத்தில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படக்கூடிய களப்பு பகுதிகளில் இந்த கண்டல் தாவரங்களை வளர்த்து எடுத்து உலகளாவிய வெப்பத்தை குறைப்பதற்கும் ஒட்சிசனின் அளவைக் கூட்டிக் கொள்வதற்குமான ஒரு செயற்பாட்டுத் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் சுற்றுலா துறையை விருத்தி செய்து கரையோர பகுதிகளை அழகுப்படுத்தும் முகமாகவும் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட துறை சார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version