Tamil News
Home உலகச் செய்திகள் பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் போராட்டம்

பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் போராட்டம்

பாலஸ்தீனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் மேலும் தீவிரப்படுத்த போவதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளன.

“எங்களுக்கு தேவை அமைதியும் ஜனநாயகமும் மட்டுமே…அண்டை நாடுகளை ஆக்கிரமித்து நமது நாட்டுடன் இணைக்கும் வேலை அல்ல” என்று பேரணியில் இஸ்ரேலிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாலஸ்தீனின் விடுதலையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் பாலஸ்தீனத்திற்கு எதிரான அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதோடு அமெரிக்க செனட்டர் பியர்ணி சான்டர்ஸ் இது குறித்து பேசிய வீடியோ போராட்டக்காரர்களால் ஒளிபரப்பப்பட்டது.

Exit mobile version