Tamil News
Home செய்திகள் படையினரை கடமையில் ஈடுபடுத்தும் உத்தரவு நீடிப்பு

படையினரை கடமையில் ஈடுபடுத்தும் உத்தரவு நீடிப்பு

பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்கத்துடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது தொடர்புடைய உத்தரவு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டிருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டத்தை நீக்கி அதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டின் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவ மட்டும் கடற்படையினர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதன்படி பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிப்பதற்காக 25 நிர்வாக மாவட்டத்தினை உள்ளடக்கும் வகையில் ஆயுதமேந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு இந்த உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது

Exit mobile version