Tamil News
Home செய்திகள் பகிரங்கப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல்: ஐ.நா.வில் ஹிருணிக்கா முறைப்பாடு

பகிரங்கப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல்: ஐ.நா.வில் ஹிருணிக்கா முறைப்பாடு

தனது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலைத் திரிபுப்படுத்தியமை மற்றும் பகிரங்கப்படுத்தியமை சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தாம் செய்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்படாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தவிர ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் எழுத்து மூலமும் அறிவித்துள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல் பகிரங்கப்படுத்தப்பட்டமையால், தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு சமூக ஊடகங்கள் வாயிலாகக் கொலை அச்சுறுத்தல் கூடவிடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி ஹிருணிகா இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருந்தார்.

Exit mobile version