Tamil News
Home செய்திகள் நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலய பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சிங்களவர்கள் – இனவாத நஞ்சூட்டும் பிக்குகள்

நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலய பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சிங்களவர்கள் – இனவாத நஞ்சூட்டும் பிக்குகள்

பழைய செம்மலை நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு அனுராதபுரம் பகுதியிலிருந்து மூன்று பஸ்களிலிருந்து சிங்கள மக்கள்  அழைத்துவரப்பட்டட்டுள்ளனர்.

பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மற்றும் மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் இன்றையதினம் பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளனர்.

அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகளால் உரையாற்றப்பட்டது . அதாவது இந்த பகுதியில் பிள்ளையார் ஆலய இருந்ததாக  தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தேரர்களால் உரையாற்றப்பட்டது .

இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கபட்டுள்ள நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இனவாத கருத்துக்கள் பௌத்த பிக்குகளால் போதிக்கப்பட்டுள்ளது .

Exit mobile version