Tamil News
Home செய்திகள் நில அபகரிப்பிற்கு எதிராக போராடியமைக்காக சிவாஜிலிங்கத்திற்கு பிடியாணை

நில அபகரிப்பிற்கு எதிராக போராடியமைக்காக சிவாஜிலிங்கத்திற்கு பிடியாணை

வன்னியில் காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கான வழக்கில் முன்னிலையாகாதமையால், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லை. வட்டுவாகல் பகுதியில் மக்களின் 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவையாளர்களுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீது முல்லைத்தீவுப் பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை 2018 பெப்ரவரி 28ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு சென்ற சிவாஜலிங்கம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று(27) விசாரணைக்கு வந்த போது, சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜராகாதபடியால், அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதவான் உத்தவிட்டார். அத்துடன் எதிர்வரும் மே மாதம் 28 திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version