Tamil News
Home செய்திகள் தேர்தல் அச்சம் – தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்த ரணில்

தேர்தல் அச்சம் – தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்த ரணில்

எதிர்வரும் வருடம் அரச தலைவர் தேர்தலை நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் முயற்சியில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் மற்றும் உலக நாடுகளும் மறைமுகமாக ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இன்று(21) இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கா தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பில் ஆர் சம்பந்தன், சாணக்கியன், ஜி. கருணாகரன், ரி. கலையரசன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் தமிழர் தரப்பில் கலந்துகொண்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் காணி உரிமை, மீழ்குடியேற்றம் மற்றும் இனநல்லிணக்கப்பாடு தொடர்பான சட்ட அமூலாக்கம், தமிழகத்தில் இலங்கை அகதிகள் எதிர்கொள்ளும் சாவால்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.

அரசின் தரப்பில் நீதி அமைச்சர், காணி அமைச்சர், வனத்துறை அமைச்சகத்தின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version