Tamil News
Home உலகச் செய்திகள் திசை மாறிச் செல்கிறார் டிரம்ப்- ஜெனரல் கோலின் பவெல்

திசை மாறிச் செல்கிறார் டிரம்ப்- ஜெனரல் கோலின் பவெல்

அமெரிக்காவில் நடந்துவரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை கடுமையான விமர்சித்துள்ள முன்னாள் உள்துறை செயலாளரும்  படைத்துறை ஜெனரலுமான கோலின் பவெல் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறி டிரம்ப் செல்வதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்து பின்னர் குடியரசு கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறிய கோலின் பவெல், போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என டிரம்ப் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”நம்மிடம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது. அதை நாம் பின்பற்ற வேண்டும். ஆனால்,அதிபர் டிரம்ப் அதில் இருந்து திசை மாறிச்செல்கிறார்” என பவெல் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், கோலின் பாவெலும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு தான் வாக்களிக்கப்போவதாகக் கோலின் பாவெல் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version