Tamil News
Home செய்திகள் தாக்குதல் விமானத்தின் பாதுகாப்புடன் சென்ற ரஸ்ய அதிபர்

தாக்குதல் விமானத்தின் பாதுகாப்புடன் சென்ற ரஸ்ய அதிபர்

ரஸ்ய அதிபரின் தனிப்பட்ட விமானம் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொண்டபோது அதற்கு பாதுகாப்பாக நான்கு எஸ்.யூ-35எஸ் ரக தாக்குதல் விமானங்கள் சென்றுள்ளன.

அந்த பிராந்தியம் பாதுகாப்பு அற்றது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ரஸ்ய அதிபரின் பயணம் முழுவதும் தாக்குதல் விமானங்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும் ரஸ்யாவின் ஊடகத்துறை பேச்சாளர் டிமிற்றி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். தாக்குதல் விமானங்கள் பறப்பதற்கான சிறப்பு அனுமதி நாடுகளிடம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (6) அபுதாபிக்கு சென்ற பூட்டீன் ஐக்கிய அமீரகத்தின் தலைவர் மொகமீட் பின் சாயிட்டையும், அதன் பின்னர் சவுதி அரேபியாவின் தலைநகர் றியாத்திற்கு சென்று சவுதியின் முடிக்குரிய அரசர் சல்மான் அல் செவூட்டையும் சந்தித்திருந்தார்.

பூட்டீனுக்கு பாதுகாப்பு வழங்கிய விமானங்கள் எஸ்யூ-27 வான் பாதுகாப்பு விமானத்தின் தரமுயர்த்தப்பட்ட வடிவமாகும், 2018 ஆம் ஆண்டு பாவனைக்கு வந்த இந்த விமானங்கள் வான் பாதுகாப்பு விமானங்களாகும். அதாவது வானில் இருந்து வானுக்கு தாக்கும் ஆயுதங்களை அதிகம் கொண்டுள்ள விமானங்களாகும்.
எனினும் அவை வழமையாக காவிச்செல்லும் ஆயுதங்களையே கொண்டு சென்றதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

Exit mobile version