Tamil News
Home செய்திகள் தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை

தமிழகத்தில் உள்ள 107 முகாம்களில், சுமார் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையின் கீழ் அகதிகளாகப் பதிவுபெற்று வசித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொடூரமான தாக்குதலை நடத்திவருகிறது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேசெல்கிறது.
அகதிகள் முகாம்களில் வாழும் மக்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறார்கள். நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்கு பணிக்கப்பட்ட முகாம் மக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்களைக் கடும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
இலங்கை அகதிகள் முகாம்களில், ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் ஒரே வாசல்தான். வீடுகளும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். தவிர, தண்ணீர் பிடிப்பதற்கும் பொதுக்குழாய்க்குதான் வரவேண்டும். பொதுக்கழிப்பறையையே பயன்படுத்த வேண்டும். தினமும் ரேஷன் பொருள்களுக்காகக் காத்திருக்க வேண்டும். அங்கும் கூட்டம் கூடக்கூடிய சூழல்தான் இருக்கிறது.
இந்த நிலையில், அரசு கடைப்பிடிக்க வலியுறுத்தும் ‘தனிமனித இடைவெளிகள்’ எல்லாம் அங்கே சாத்தியம்தானா?
அரசுகளின் பாராமுகத்தோடு இருக்கும் அகதிமுகாம்கள் இத்தனை கொடுமையான சூழல் என்றால் அதை விட கொடுமையான சூழலில் சிறைகளை விட கொடுமையான சித்திரவதை முகாம்களாக திகழும் சிறப்பு முகாம்கள். தமிழக அரசே எம் மக்களை அடைத்து வைத்து கொன்று ஒழித்தது போதும்…
கொரோனாவிற்கும் இரையாகாமல் விடுதலை செய்!
Sivavathani Prabaharan
Exit mobile version