Tamil News
Home உலகச் செய்திகள் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடியாது- பிரித்தானிய நீதிமன்றம்

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடியாது- பிரித்தானிய நீதிமன்றம்

விக்கிலீஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணைய தள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

2012-ல் சுவீடனில் இரு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளி வந்த போதிலும், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் குறித்த இரகசியங்களையும், ஆவணங்களையும் வெளியிட்டு அம்பலப்படுத்தியதால் அமெரிக்காவின் கோபத்தி்றகு ஆளானார். அவரை நாடு கடத்தி அமெரிக்க கொண்டுவர தொடரப்பட்ட வழக்கு லண்டன் கோர்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் அமெரிக்க தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த மறுத்துள்ளது.

Exit mobile version